​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி மேல்முறையீடு

Published : Mar 05, 2019 4:14 PM

இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி மேல்முறையீடு

Mar 05, 2019 4:14 PM

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் - இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 28 ஆம் தேதி நிராகரித்தது.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், அரசியல் மாற்றத்தை அடிப்படையாக கொண்டு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ததாகவும், முழுமையாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.