​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி, பார்வையாளர்களை கவர்ந்த நாய்கள்

Published : Mar 03, 2019 3:46 PM



அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி, பார்வையாளர்களை கவர்ந்த நாய்கள்

Mar 03, 2019 3:46 PM

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் கன்னியாகுமரி கென்னல் கிளப் சார்பில் இக்கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜெர்மன் செப்பேர்ட், லேப்ரடாக், பக், ராட் வீலர், சைபீரியன் அஸ்கி உள்ளிட்ட வெளிநாட்டு ரக நாய்களும், நாட்டு நாய் ரகங்களான கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம் ஆகிய நாய்களும் பங்கேற்றன.

எஜமானரின் கட்டளைக்கு கீழ்ப் படிதல், வெளித் தோற்றம், உடல் வாகு ஆகியவற்றின் மூலம் மதிப்பெண் வழங்கப்பட்டு சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டன.