​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

Published : Mar 03, 2019 3:40 PM

தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

Mar 03, 2019 3:40 PM

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். குமாரகோவிலில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் என்ற தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது.

இங்கு முதலாம் ஆண்டு பயின்று வரும் கேரள மாநிலத்தை சேர்ந்த திபு என்ற மாணவரை, இரண்டாம் ஆண்டு பயிலும் இஸ்மாயில், பிரவுண் ,கிறிஸ்ட் ஆகிய மூன்று மாணவர்கள் தொடர்ந்து ராக்கிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தக்கலை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் திபு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ராக்கிங்கில் ஈடுபட்ட மூன்று மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர்.