​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரட்டை இலையை கொடுங்கள் என வழக்கு போடவில்லை - டி.டி.வி தினகரன்

Published : Mar 03, 2019 3:14 PM



இரட்டை இலையை கொடுங்கள் என வழக்கு போடவில்லை - டி.டி.வி தினகரன்

Mar 03, 2019 3:14 PM

இரட்டை இலையை தங்களுக்கு கொடுங்கள் என வழக்கு போடவில்லை எனவும், தங்கள் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றுதான் வழக்கு தொடுத்தோம் எனவும் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இரட்டை இலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அவர் கூறினார். மேலும், அமமுக, தேர்தல் களத்தில் இல்லை என ஆர்.கே நகர் தேர்தலின் போதும் கூட சிலர் கூறினார்கள் என்று டி.டி.வி தினகரன் விமர்சித்தார்.