​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை மறுபரிசீலினை செய்யும் கிறிஸ்கேல்

Published : Mar 01, 2019 5:27 PM

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை மறுபரிசீலினை செய்யும் கிறிஸ்கேல்

Mar 01, 2019 5:27 PM

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதை மறுபரிசீலினை செய்ய உள்ளதாக மேற்கு இந்திய தீவு அணி வீரர் கிறிஸ் கேல் தெரிவித்துள்ளார்.

அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கேல், உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஓய்வுபெறும் முடிவை மறுபரிசீலினை செய்ய உள்ளதாக தற்போது அவர் கூறியுள்ளார்.

மேற்கு இந்திய தீவில் தற்போது, இங்கிலாந்து அணியுடன் நடந்து வரும் ஒருநாள் போட்டி தொடரில், கிறிஸ்கேல் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதற்கு முன்பு மேற்கு இந்திய தீவு அணியில், அதிகபட்சமாக பிரைன் லாரா 10 ஆயிரத்து 438  ரன்கள் எடுத்திருந்தார். அவருடைய சாதனையை கிறிஸ்கேல் விரைவில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.