​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Published : Feb 26, 2019 7:19 PM

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Feb 26, 2019 7:19 PM

நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அரசு அலுவல்களுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து 7 பேர் கொண்ட அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் மற்றும் மேலாளர் சுப்பரமணி ஆகியோரது அறையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அதில் கணக்கில் வராத 15 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


ஊராட்சி ஒன்றிய பணிகளுக்கு டெண்டர் கிடைக்காதவர்களுக்கு, அவர்கள் செலுத்திய வைப்பு தொகையை திரும்ப வழங்குவதற்காக லஞ்சம் கேட்கப்பட்டதாக வந்த புகாரில் சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.