​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்டிக் கடையை காலி செய்யச் சொல்லி பெண்களுடன் வாக்குவாதம்

Published : Feb 26, 2019 3:36 PM



பெட்டிக் கடையை காலி செய்யச் சொல்லி பெண்களுடன் வாக்குவாதம்

Feb 26, 2019 3:36 PM

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பெட்டிக் கடையை அடித்து நொறுக்கும் சிலர், பெண்களையும் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


திருமயம் பைரவர் கோவில் அருகே வாசுகி என்பவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாசுகியிடமே பொருட்கள் வாங்குவது, அருகே கடை வைத்துள்ள சிவராமன் என்பவரின் கண்களை உறுத்தியுள்ளது.

அவர் தனது சகோதரர் சரவணன் என்பவரிடம் இதுபற்றி முறையிடவே, அவர் அடியாட்களுடன் சென்று வாசுகியின் கடையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கடையை காலி செய்யச் சொல்லி பெண்களுடன் வாக்குவாதம் செய்த அந்த அடியாட்கள், கடையில் இருந்த பொருட்களை உடைத்ததுடன் பெண்களையும் தாக்கினர்.