​​ மனைவியைக் கொன்று படுக்கையின் கீழ் மறைத்து வைத்த கணவர் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மனைவியைக் கொன்று படுக்கையின் கீழ் மறைத்து வைத்த கணவர் கைது

மனைவியைக் கொன்று படுக்கையின் கீழ் மறைத்து வைத்த கணவர் கைது

Feb 05, 2018 1:19 PM

டெல்லியில் மனைவியைக் கொன்று 18 நாட்களாக படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்த கணவர் கைது செய்யப்பட்டார். டெல்லியின் துக்ளகாபாத்தைச் சேர்ந்தவர் 26 வயதான சுரேஷ்சிங் இவர் தன்னை விடவும் 4 வயது மூத்த பெண்ணான மரியா என்பவரை முகநூல் மூலம் கிடைத்த அறிமுகத்தில் கடந்த 2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தனது சொந்த ஊரில் வேறொரு பெண்ணையும் திருமணம் செய்த சுரேஷ் முதல் மனைவி மரியாவை 11 ம் தேதி கொலை செய்தார். மரியாவின் உடலை டெல்லியில் உள்ள தனது வீட்டின் படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில் வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தால் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் 18 நாட்களுக்குப் பின் மரியாவின் உடலை போலீஸார் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் வைத்து சுரேஷ் சிங்கை கைது செய்தனர்.