​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர்களில் சாகித் அப்ரிடியை பின்னுக்கு தள்ளிய கிறிஸ் கெய்ல்

Published : Feb 21, 2019 12:48 PM

சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர்களில் சாகித் அப்ரிடியை பின்னுக்கு தள்ளிய கிறிஸ் கெய்ல்

Feb 21, 2019 12:48 PM

சிக்சர் மன்னனான கிறிஸ் கெய்ல் தனக்கே உரித்தான புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் இருந்தவர் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி.

அவர் 524 போட்டிகளில் விளையாடி 476 சிக்சர்களை பறக்க விட்டிருந்தார். ஆனால், சாகித் அப்ரிடியை தற்போது கிறிஸ் கெய்ல் முந்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் கெய்ல், 12 சிக்சர்களை விளாசினார்.

ஒரு பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்றது. இதன் மூலம் இவரது சிக்சர் கணக்கு 477 ஆனது. அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் முதலிடம் பிடித்துள்ளார்.