​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தி.மு.க ஒரே நாளில் 4 கட்சிகளுடன் பேச்சு

Published : Feb 21, 2019 11:06 AM

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தி.மு.க ஒரே நாளில் 4 கட்சிகளுடன் பேச்சு

Feb 21, 2019 11:06 AM

நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக-வுடன் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது என மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.கவுடனும் திமுக இன்று பேச்சு நடத்த உள்ளது.

திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு புதுச்சேரி தொகுதியும், தமிழகத்தில் 9 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பேச்சுவார்த்தை குழுவினர், அண்ணா அறிவாலயத்தில் திமுக பேச்சுவார்த்தை குழுவினருடன், பேச்சு நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், திமுகவுடன் தொகுதிப்பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சு சுமூகமாகவும் திருப்தியாகவும் அமைந்தது என்றார். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்றும் அவர் கூறினார். எத்தனை தொகுதிகள் கேட்கப்பட்டது என்பன உள்ளிட்ட விவரங்களை பாலகிருஷ்ணன் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளும் திமுக தலைமையுடன் இன்று பேச்சு நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.