​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவர் படுகொலை

Published : Feb 20, 2019 10:45 AM

திருச்சியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவர் படுகொலை

Feb 20, 2019 10:45 AM

திருச்சியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவர் படுகொலை செய்யப்பட்டனர். 

திருச்சி தேவதானபுரத்தை சேர்ந்த ஜெகநாதன் மற்றும் அவரது நண்பர்கள் பிரகாஷ், ராஜூ ஆகியோர் நேற்றிரவு ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த ஜெகநாதன் கத்தியால் இருவரையும் குத்தி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழ்ந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜெகநாதனை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.