​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக பெர்னி சாண்டர்ஸ் அறிவிப்பு

Published : Feb 19, 2019 8:25 PM

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக பெர்னி சாண்டர்ஸ் அறிவிப்பு

Feb 19, 2019 8:25 PM

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக எம்.பி. பெர்னி சாண்டர்ஸ் அறிவித்துள்ளார்.

77 வயதான பெர்னி சாண்டர்ஸ் தமது கல்லூரி நாட்களில் இருந்தே இன சமத்துவத்துக்கான போராட்டங்களை ஒருங்கிணைத்தவர். சுயேட்சையாகப் போட்டியிட்டு சில முறை வென்ற பெர்னி சாண்டர்ஸ் கடந்த அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டார். அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், காப்பீடு, குறைந்த பட்ச ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளால் 33 சதவீத வாக்குகளை வென்றார்.

55 சதவீத வாக்குகளை வென்ற ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், தமது சொந்த ஊரான வெர்மான்ட் ((Vermont)) ரேடியோவில் உரையாற்றிய பெர்னி சாண்டர்ஸ், தற்போது 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பதாக அறிவித்துள்ளார்.