​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் தேர்வுக்கு 550 மையங்கள் தயார் - அமைச்சர் செங்கோட்டையன்

Published : Feb 19, 2019 1:51 PM

நீட் தேர்வுக்கு 550 மையங்கள் தயார் - அமைச்சர் செங்கோட்டையன்

Feb 19, 2019 1:51 PM

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத மத்திய அரசு கூறியுள்ள உள்கட்டமைப்பு வசதிகளுடன், இந்த ஆண்டு 550 மையங்கள் தயார்நிலையில் உள்ளன என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அடுத்த வாரத்திற்குள் 15 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், 8,9,10 ஆகிய வகுப்புகளுக்கு ஸ்மார்ட் மடிக்கணிணி வழங்க மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

நீட் தேர்வுக்காக, இந்த ஆண்டு ஒரு மாணவர் கூட வெளிமாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் நிலை வராது என்றும் கூறினார். பிளஸ்டுவில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சிஏ ( Charted Accountant ) விற்கான சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.