​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாயைக் காணவில்லை எனக் கூறி தீக்குளிக்க முயன்ற நபர்கள்

Published : Feb 18, 2019 9:05 PM

நாயைக் காணவில்லை எனக் கூறி தீக்குளிக்க முயன்ற நபர்கள்

Feb 18, 2019 9:05 PM

நாயைக் காணவில்லை எனக் கூறி தமிழக வாழ்வுரிமைக் கட்சி பிரமுகர், காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் திருப்பூரில் நிகழ்ந்துள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் சதீஷ்குமார். இவர் வீட்டு உரிமையாளருடன் ஏற்பட்ட பிரச்சனையால் சொர்ணபுரி லே அவுட்டில் உள்ள வீட்டை காலி செய்தார்.

வீட்டு உரிமையாளருடன் ஏற்பட்ட பிரச்சனையால் வீட்டைக் காலி செய்த அவர் சிறிது பொருட்களையும் வளர்த்த நாயையும் அங்கேயே விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திரும்பி வந்த போது தனது நாய் இல்லை எனக் கூறி சிலருடன் சேர்ந்து காவல் நிலையம் சென்ற அவர் தீக்குளிக்க முயன்றார்.

இதை அடுத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பி வைத்தனர்.