​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுமார் ரூ.200 கோடி அபராதம் செலுத்த காக்னிசன்ட் நிறுவனம் சம்மதம்

Published : Feb 16, 2019 5:45 PM

சுமார் ரூ.200 கோடி அபராதம் செலுத்த காக்னிசன்ட் நிறுவனம் சம்மதம்

Feb 16, 2019 5:45 PM

தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாடு ஆணையத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் அபராதம் செலுத்த காக்னிசன்ட் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் காக்னிசன்ட் நிறுனத்திற்காக புதிய கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற, அரசு அதிகாரிகளுக்கு காக்னிசன்ட் நிறுவனத்தின் நிர்வாகிகள் 2 பேர் 2014 ஆம் ஆண்டு 20 லட்சம் டாலர் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கில் நியூஜெர்சியிலுள்ள நீதிமன்றம் அவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் அபராதமாக செலுத்த காக்னிசன்ட் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்ட இருவரும் தற்போது பணியில் இல்லை என்றும், அவர்கள் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றம் விசாரிக்கும் எனவும் காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பிரான்சிஸ்கோ டிசோசா தெரிவித்தார்.

இதற்கிடையே அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக கூறப்படும் காக்னிசன்ட் முன்னாள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.