​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சின்னதம்பி யானையை பிடிப்பதில் வனத்துறைக்கு சிரமம்

Published : Feb 14, 2019 6:22 PM

சின்னதம்பி யானையை பிடிப்பதில் வனத்துறைக்கு சிரமம்

Feb 14, 2019 6:22 PM

திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புத்தூரில் முகாமிட்டுள்ள காட்டு யானை சின்னதம்பியை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மாலை 4 மணி அளவில் கரும்பு தோட்டத்தில் இருந்து வெளியே வந்த சின்னதம்பிக்கு வாய்க்கால் அருகே பலா பழங்களை வனத்துறையினர் கொடுத்தனர்.

சின்னதம்பி முன்னேறி வரும் பட்சத்தில் பிடிப்பதற்கு அவர்கள் தயாராக இருந்த நிலையில், பலாக்களை சுவைத்து விட்டு மீண்டும் கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்து விட்டது.

சின்னதம்பி யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இன்றைக்குள் சின்னதம்பியை பிடித்து விடலாம் என்று வனத்துறையினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.முடியாத பட்சத்தில் நாளை பிடிக்கப்படும் என ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் கூறியுள்ளார்.