​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிசுவுக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்து மீண்டும் தாயின் கருப்பையில் வைத்து மருத்துவர்கள் சாதனை

Published : Feb 13, 2019 6:13 PM

சிசுவுக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்து மீண்டும் தாயின் கருப்பையில் வைத்து மருத்துவர்கள் சாதனை

Feb 13, 2019 6:13 PM

சிசுவுக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்து மீண்டும் தாயின் கருப்பையில் வைத்து இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

எஸ்ஸெக்ஸ் நகரைச் சேர்ந்த பீதன் சிம்ப்சன் என்ற பெண்ணின் 20 வாரங்களேயான சிசுவுக்கு தலை சரியாக இல்லாததை மருத்துவர்கள் கண்டனர். spina bifida என்ற முதுகுத்தண்டு பிரச்சனையால் சிசு பாதிக்கப்பட்டதே இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சிசுவுக்கு அறுவை சிகிச்சை செய்தல், சிசுவை அழித்தல், அல்லது அப்படியே விட்டு விடுதல் ஆகிய மூன்று வாய்ப்புகள் அந்த தம்பதிக்கு கொடுக்கப்பட்டது. அதில் அந்த தம்பதியானது, சிசுவுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தது. இதை அடுத்து அந்த சிசுவுக்கு மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து மீண்டும் தாயின் கருப்பையில் வைத்து சாதனை புரிந்துள்ளனர்.