​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜாக்டோ, ஜியோ போராட்டத்தால் நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர்களை மீண்டும் பணி அமர்த்த நடவடிக்கை

Published : Feb 13, 2019 6:12 PM

ஜாக்டோ, ஜியோ போராட்டத்தால் நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர்களை மீண்டும் பணி அமர்த்த நடவடிக்கை

Feb 13, 2019 6:12 PM

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்துவது தொடர்பாக மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுத்தியுள்ளார். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தற்போது மேல்நிலை வகுப்புகளுக்கான செய்முறை விளக்க தேர்வு தொடங்கியுள்ளதாலும், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விரைவில் துவங்க உள்ளதாலும் மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.