​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடகாவில், ஆளும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்பட்ட 5 எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்து பெங்களூரு திரும்பினர்

Published : Feb 13, 2019 6:03 PM

கர்நாடகாவில், ஆளும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்பட்ட 5 எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்து பெங்களூரு திரும்பினர்

Feb 13, 2019 6:03 PM

கர்நாடகாவில், அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்பட்ட 5 எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்து பெங்களூரு திரும்பினர்.

கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆளும் கட்சி மீது சில எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஒரு மதசார்பற்ற ஜனதாதளம் எம்எல்ஏ சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்து மும்பையில் தங்கியிருந்தனர்.

தற்போது பெங்களூரு திரும்பியுள்ள 5 எம்ஏல்ஏக்களும், சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்பட உள்ளதாகவும், தெரிவித்தனர். இதற்கிடையே, எம்எல்ஏக்களை இழுக்க எடியூரப்பா பேசியதாக வெளியிடப்பட்ட ஆடியோ உள்நோக்கம் கொண்டது என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.