​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பணிபுரியும் இடங்களில் பாலியல் குற்றங்கள் - நடவடிக்கை எடுக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்

Published : Feb 13, 2019 5:36 PM

பணிபுரியும் இடங்களில் பாலியல் குற்றங்கள் - நடவடிக்கை எடுக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்

Feb 13, 2019 5:36 PM

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதை அரசு உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. முருகனுக்கு எதிராக பெண் எஸ்.பி.யின் பாலியல் புகார் மீது 6 மாதங்களாக நடவடிக்கை எடுக்காததற்கு ஏற்கனவே நீதிபதி அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்த போது பாதிக்கப்பட்ட பெண், காவல் துறையில் புகார் அளிக்காமல் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனரிடம் புகார் அளித்ததால் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் புகாரில் கோரப்பட்ட படி விசாகா கமிட்டிக்கு அனுப்பப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இந்நிலையில் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததாகவும், இதில் காலதாமதம் ஏதும் இல்லை என்றும் கூறப்பட்டது.

இதுபோன்ற புகார்கள் மீது பாரபட்சமற்ற முறையிலும், நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொள்ளாமல், துரிதமாக செயல்பட்டும் நடவடிக்கை எடுப்பதை அரசு உறுதி செய்ய அறிவுறுத்திய நீதிபதி வழக்குகளின் தீர்ப்பை நாளை அளிப்பதாக தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தார்.