​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு மீண்டும் தடை

Published : Feb 13, 2019 8:36 AM

கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு மீண்டும் தடை

Feb 13, 2019 8:36 AM

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு   மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை- புளியரை வழியாக ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்று வருகின்றன.கோட்டைவாசல் தாண்டி ஆரியங்காவு வனத்துறை சோதனை சாவடி முதல் தென்மலை வரை  உள்ள இந்த பாதை மிகவும் கடினமான வளைவுகள் மற்றும் ஆபத்தான அதள பாதாள மலைப்பாதையாகும்.

தற்போது கோடைகாலம் துவங்கியுள்ளதை அடுத்து இந்த சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த வழியாக மீண்டும் அதிக எடை கொண்ட சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்கு 10டன்னுக்கு மேலுள்ள பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை அனுமதிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.