​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை

Published : Feb 13, 2019 8:35 AM

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை

Feb 13, 2019 8:35 AM

சேலத்தில், பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணனுக்கு சகுந்தலா என்ற மனைவியும் ஒரு மகனும் ,இரண்டு மகள்களும் உள்ளனர். கணவனுடன் தகராறு ஏற்பட்டதால், சகுந்தலா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். 2 மகள்களுக்கும் சரவணன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் கர்ப்பம் ஆனதை அறிந்த அக்கம்பக்கத்தினர் சேலம் நகர மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் சரவணனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம் சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.