​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

Published : Feb 12, 2019 4:18 PM

வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

Feb 12, 2019 4:18 PM

மதுரையில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கடந்த 2015 - 2016-ஆம் ஆண்டு போலி பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு 6,777 பேருக்கு உரிமம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒவ்வொருவரிடமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை என மொத்தம் 10 கோடியே 16 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக அப்போதைய மதுரை வடக்கு போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார் உள்ளிட்ட 6 அதிகாரிகள் மற்றும் 11 ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் என 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக மதுரையில் 4 அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.