​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுக அரசுக்கு 5 ஆண்டுகளும் எனது ஆதரவு - கருணாஸ்

Published : Feb 12, 2019 3:50 PM

அதிமுக அரசுக்கு 5 ஆண்டுகளும் எனது ஆதரவு - கருணாஸ்

Feb 12, 2019 3:50 PM

அதிமுக அரசுக்கு 5 ஆண்டுகளும் தனது ஆதரவு இருக்கும் என எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், புலிப்படையாக இருந்தாலும் எந்த படையாக இருந்தாலும் தங்களை எப்போதும் வெல்ல முடியாது என கூறினார். அப்போது பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், இந்த முக்குலத்து புலிகள் பாசப்புலிகள் என்றார். ஐந்தாண்டுகள் தன்னுடைய ஆதரவு அதிமுக அரசுக்குதான் என்றும் அவர் தெரிவித்தார்.

தமது தொகுதிக்கு தான் இதுவரை ஏதும் செய்யவில்லை என்று கூறியுள்ள எம்எல்ஏ கருணாஸ், கோரிக்கைளை நிறைவேற்றியதற்காகவும், பரிசீலிப்பதாக உறுதியளித்ததற்காகவும் அரசுக்கு ஆதரவும் நன்றியும் தெரிவித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், புலிப்படையாக இருந்தாலும் எந்த படையாக இருந்தாலும் தங்களை எப்போதும் வெல்ல முடியாது என கூறினார். அப்போது பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், இந்த முக்குலத்து புலிகள் பாசப்புலிகள் என்றார். ஐந்தாண்டுகள் தன்னுடைய ஆதரவு அதிமுக அரசுக்குதான் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருப்பதால் அரசுக்கு எதிராக செயல்பட்டால் எம்எல்ஏ பதவியை இழக்க நேரிடும் என்றார்.