​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவில் நிலங்களை மீட்கும் அறநிலையத்துறையின் நடவடிக்கையில் திருப்தி இல்லை - நீதிபதிகள்

Published : Feb 12, 2019 3:50 PM

கோவில் நிலங்களை மீட்கும் அறநிலையத்துறையின் நடவடிக்கையில் திருப்தி இல்லை - நீதிபதிகள்

Feb 12, 2019 3:50 PM

ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்பதற்கான இந்து அறநிலையத்துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கூறினர்.

மதுரை மாவட்டம் பரவையில் ஆக்கிரமிப்பிலுள்ள வடக்குவாசல் செல்லியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை மீட்டுத் தரக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியதுடன் கோவில் நிலங்களை மீட்பதற்கான அறநிலையத்துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என தெரிவித்தனர்.

இது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டனர். தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு இடங்களை தானமாக வழங்கியோர் பட்டியல் மற்றும் சொத்து விவரங்கள் மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதிபடுத்த வேண்டும் என்று கூறினர்.

இது தொடர்பாக வருவாய் துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் துறை செயலர் அறிவுறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை பிப்ரவரி 19 தேதிக்கு ஒத்திவைத்தனர்.