​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Published : Feb 12, 2019 3:01 PM

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Feb 12, 2019 3:01 PM

அடுத்த இரண்டு தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகம் புதுவையை பொறுத்த வரை வறண்ட வானிலையே நிலவுவதாக கூறியுள்ளது. மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இருந்து தென் கிழக்கு அரபிக்கடல் வரை வளிமண்டலத்தில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே பகுதிகளில் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை என தெரிவித்துள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 31 டிகிரிசெல்சியஸ் முதல் ,குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என கூறியுள்ளது.