​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சந்தியாவின் மற்ற உடல் பாகங்களைத் தேடும் பணி தொடர்ந்து ஏழாவது நாளாக நடைபெற்று வருகிறது

Published : Feb 12, 2019 12:34 PM

சந்தியாவின் மற்ற உடல் பாகங்களைத் தேடும் பணி தொடர்ந்து ஏழாவது நாளாக நடைபெற்று வருகிறது

Feb 12, 2019 12:34 PM

துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சந்தியாவின் மற்ற உடல் பாகங்களைத் தேடும் பணி தொடர்ந்து ஏழாவது நாளாக நடைபெற்று வருகிறது.

சந்தியா கொலை வழக்கில் அவரது கணவரான திரைப்பட இயக்குனர் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். சந்தியாவின் தலை மற்றும் இதர பாகங்களை அதே குப்பைக் கிடங்கில் போலீசார் தேடி வருகின்றனர். ஜேசிபி மற்றும் மோப்ப நாய் டைசன் உதவியுடன் ஏழாவது நாளாக தேடுதல் பணி தொடர்கிறது.

ஏற்கெனவே தேடிய இடங்களில் மட்டும் குப்பைகளை கொட்டுமாறும், தேடாத இடங்களில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.