​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இன்றைய கதாநாயகனாக உள்ள காட்டுயானை சின்னதம்பியை துன்புறுத்தும் நோக்கம் இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்

Published : Feb 12, 2019 10:56 AM

இன்றைய கதாநாயகனாக உள்ள காட்டுயானை சின்னதம்பியை துன்புறுத்தும் நோக்கம் இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்

Feb 12, 2019 10:56 AM

இன்றைய கதாநாயகனாக உள்ள காட்டுயானை சின்னதம்பியை துன்புறுத்தும் நோக்கம் இல்லை என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சின்னத்தம்பியின் நிலை குறித்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தினசரி கதாநாயகனாக மாறிவிட்ட சின்னத்தம்பி யானை எங்கு செல்கிறது என்பதை ஊடகங்கள் காட்டி வருவதாகக் குறிப்பிட்டார். சின்னதம்பி யானையை காட்டுக்குள் விடுவதா என்பது குறித்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ளது என்றும், அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் மரம் வளர்ப்பு நடவடிக்கைகளால் 2011ஆம் ஆண்டில் 21.76 சதவீதமாக இருந்த பசுமைப் போர்வை பரப்பளவு 23.57 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.