​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெட்ரோ ரயிலில் இன்றும் இலவச பயணம் செய்யலாம்

Published : Feb 12, 2019 6:46 AM

மெட்ரோ ரயிலில் இன்றும் இலவச பயணம் செய்யலாம்

Feb 12, 2019 6:46 AM

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் இன்றும் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎம்எஸ் மற்றும் விமானநிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ சேவை நேற்று 6 மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கோளாறு சரிசெய்யப்பட்டதாகவும், வழக்கமான சேவை இன்று தொடரும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இலவச சேவை இன்று ஒருநாள் நீட்டிப்பு செய்யப்படுவதாகவும்,பயணிகள் இன்று இரவு 10 மணி வரை இலவச பயணம் அனுபவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச பயணம் காரணமாக நேற்று மெட்ரோ ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.