​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை - வனத்துறை

Published : Feb 11, 2019 6:27 PM

சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை - வனத்துறை

Feb 11, 2019 6:27 PM

சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை என தமிழக வனத்துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற தடை கோரிய வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரனைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த தலைமை வனபாதுகாவலர் சஞ்சய் குமார் ஸ்ரீவாத்சவா, சின்னத்தம்பி யானையை காட்டுக்கு அனுப்ப முயற்சித்தும், அது மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடுவதாக கூறினார்.

தற்போது சின்னத்தம்பி மிகவும் சாதுவாக மாறிவிட்டதால் அதனை காட்டுக்குள் திருப்பி அனுப்புவது சிரமமானது என யானைகள் நிபுணர் அஜய் தேசாஜி அறிக்கை அளித்துள்ளதாகவும், அந்த அறிக்கையின் படி யானையை பிடித்து முகாமில் பாதுகாத்து பாரமரிக்க இருப்பதாக கூறி அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கை மீண்டும் செவ்வாய்கிழமை விசாரிப்பதாக நீதிபதிகள்  தள்ளிவைத்தனர்.