​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயரை சூட்டக் கோரிய வழக்கில் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவு

Published : Feb 11, 2019 5:21 PM

மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயரை சூட்டக் கோரிய வழக்கில் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவு

Feb 11, 2019 5:21 PM

மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயரை சூட்டுவது தொடர்பாக பரிசீலித்து உரிய முடிவெடுக்க  விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையின் சிறப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விளங்குவதாக மனுதாரர் தெரிவித்திருந்தார். விமான நிலையத்துக்கு பல்வேறு சாதிய  தலைவர்களின் பெயர்களை சூட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

சாதிய தலைவர்களின் பெயர்களை சூட்டினால் ஏற்கத்தக்கதாக அமையாது என்றும், மதுரையின் அடையாளங்களில் ஒன்றான மீனாட்சி அம்மன் பெயரை சூட்ட உத்தரவிடவும் கோரப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக 6 மாதங்களில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.