​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவின் கிராமி விருது விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மகளுடன் பங்கேற்பு

Published : Feb 11, 2019 4:42 PM



அமெரிக்காவின் கிராமி விருது விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மகளுடன் பங்கேற்பு

Feb 11, 2019 4:42 PM

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலசில் கிராமி விருது நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மகளுடன் பங்கேற்றார்.

இசைக் கலைஞர்களின் திறமைக்கு அங்கீகாரம் வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலசில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

தமது மகள் ரஹீமாவுடன் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான், அது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் 86 வயதில் 28-வது கிராமி விருது பெற்ற குவின்சி ஜோன்சையும் ரஹ்மான் பாராட்டினார்.

2010-ஆம் ஆண்டு ஸ்லம் டாக் மில்லியனர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் கிராமி விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.