​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்தில் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Published : Feb 11, 2019 3:15 PM



லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்தில் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Feb 11, 2019 3:15 PM

தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்தில் தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் ஊழலில் ஈடுபட்டால், அவர்களை விசாரிப்பதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு லோக் ஆயுக்தா சட்டத்தை மத்திய அரசு இயற்றியது.

தமிழகத்தில் இன்னும் லோக் ஆயுக்தா ஏன் அமைக்கவில்லை என உச்சநீதிமன்றம் பல முறை கண்டனம் தெரிவித்தது. இது குறித்து தமிழக தலைமை செயலாளர் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணி மட்டுமே தாமதமாகிக் கொண்டே இருப்பதாகவும், விரைவில் அந்த பணி முடிந்துவிடும் என கூறப்பட்டு இருந்தது. அதை ஏற்ற உச்சநீதிமன்றம், லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்தில் தேர்வு செய்து 4 வாரத்திற்குள் நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.