​​ திருப்பூர் அருகே அட்டைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பூர் அருகே அட்டைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

திருப்பூர் அருகே அட்டைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

Feb 02, 2018 7:57 PM

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அட்டைப்பெட்டி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
பல்லடத்தை அடுத்த அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் பழைய அட்டைப்பெட்டி, பஞ்சு, நூல் ஆகியவற்றை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.

இவருக்குச் சொந்தமான குடோன் பல்லடம் – அம்மாபாளையம் சாலையில் உள்ளது. வெள்ளிக்கிழமை மாலையில் திடீரென குடோனில் தீப்பிடித்தது. மளமளவென பரவிய தீயில் குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டைப்பெட்டிகள்,பஞ்சு, நூல் ஆகியவை எரிந்து நாசமாயின.

தீயணைப்புத்துறையினர் வர தாமதமான நிலையில் தண்ணீர் லாரி உதவியுடன் பொதுமக்களே தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தாமதமாக வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.