​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுக-வின் உண்ணாவிரதப் போராட்டம் டெல்லியின் கவனத்தை ஈர்க்கும் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

Published : Apr 03, 2018 1:40 AM



அதிமுக-வின் உண்ணாவிரதப் போராட்டம் டெல்லியின் கவனத்தை ஈர்க்கும் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

Apr 03, 2018 1:40 AM

அதிமுக சார்பில் நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டம் டெல்லியின் கவனத்தை ஈர்க்கும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை மாதவரம் அருகே 8ஏக்கர் நிலப்பரப்பில் 95கோடி ரூபாய் செலவில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கென கட்டப்பட்டு வரும் புறநகர் பேருந்துநிலையத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

இரண்டு அடுக்குகளைக் கொண்ட  நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தைப் பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், காவிரி விவகாரத்திற்காக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெறும் அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டம், டெல்லியின் கவனத்தை ஈர்க்கும் எனத் தெரிவித்தார்.