​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புயல் பாதித்த பகுதி மக்களுக்கு மத்திய அரசு கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி

Published : Feb 08, 2019 7:22 PM

புயல் பாதித்த பகுதி மக்களுக்கு மத்திய அரசு கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி

Feb 08, 2019 7:22 PM

நாகையில் புயல் பாதித்த பகுதி மக்களுக்கு மத்திய அரசு மானியத்துடன் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ஏராளமானவர்களிடம் விண்ணப்பக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வனிதா, நாகை புதிய பேருந்து நிலையம் எதிரே கமலம் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் புயல் பாதித்த பகுதிகளுக்குச் சென்ற வனிதா, மத்திய அரசு 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குவதாகவும் அதில் 25 ஆயிரம் ரூபாய் மானியம் என்றும் மீதமுள்ள தொகையை மாதம் ஆயிரத்து 500 வீதம் செலுத்த வேண்டும் என்றும் கூறி பிரச்சாரம் செய்துள்ளார்.

இதற்கான விண்ணப்பக்கட்டணமாக 150 ரூபாயை எடுத்துக்கொண்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகலுடன் தமது அலுவலகத்துக்கு வருமாறு கூறியுள்ளார்.

இதனை நம்பி கடந்த 3 தினங்களாக ஏராளமான பெண்கள் வனிதாவின் அலுவலத்துக்கு வந்து 150 ரூபாய் செலுத்தி விண்ணப்பம் வழங்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரிக்கையில் வனிதா முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து வனிதா உட்பட 4 பேரை மகளிர் காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணைக்குப் பின் அவர்களில் 2 பேரை மட்டும் விடுவித்த போலீசார், வனிதா மற்றும் கார்த்திகேயன் என்பவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள வனிதா, கடன் வாங்கித் தருவதாகக் கூறியது உண்மை என்றும் ஆனால் தாம் யாரிடமும் விண்ணப்பக்கட்டனம் வாங்கவில்லை என்றும் கூறினார்.