​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டி.டி.வி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்

Published : Feb 07, 2019 10:41 AM



டி.டி.வி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்

Feb 07, 2019 10:41 AM

டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், அதுகுறித்து 4 வார காலத்திற்குப் பிறகு தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம் என கூறியுள்ளது.

குக்கர் சின்ன வழக்கை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், கே.எம். ஜோசப் அமர்வு விசாரித்து வந்தது. டிடிவி தினகரனின் கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கடந்த 24ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என்றும், தேர்தல் ஆணையத்தில் உள்ள ஒரு பொதுவான சின்னத்தை அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு மட்டுமே வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொதுப்பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை அங்கீகரிக்கப்படாத கட்சி உரிமை கோர முடியாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், கே.எம். ஜோசப் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் உள்ள இரட்டை இலை சின்ன வழக்கை 4 வார காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் அதன் பிறகு, அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது பற்றி தேர்தல் ஆணையமே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

image