​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிளாஸ்டிக் உறையோடு பொருட்களை விற்கும் 95 நிறுவனங்களுக்கு நிபந்தனைகள்

Published : Feb 06, 2019 6:41 PM

பிளாஸ்டிக் உறையோடு பொருட்களை விற்கும் 95 நிறுவனங்களுக்கு நிபந்தனைகள்

Feb 06, 2019 6:41 PM

இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் உறையோடு பொருட்களை விற்கும் 95 நிறுவனங்களுக்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிபந்தனைகள் விதித்துள்ளது. 

நெஸ்லே, பிரிட்டானியா, கெவின் கேர்,  ஜான்சன், சக்தி மசாலா அம்வே, டாடா,  ஹிந்துஸ்தான் யூனிலிவர் உள்ளிட்ட 95 நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களிடம் முறைப்படி விண்ணப்பித்து ஒரு மாதத்துக்குள் அனுமதி பெற்று, அதன் நகல்களை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தயாரிப்புகளை வினியோகம், விற்பனை செய்பவர்கள் மற்றும் யாருக்கு வினியோகம் செய்யப்படுகிறது என்பது குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உற்பத்தி செய்பவர்களே அகற்றுவதற்கான செயல் திட்டத்தை தயாரிக்க தமிழக அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறினால் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.