​​ இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி

இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி

Feb 02, 2018 4:14 PM

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 600 புள்ளிகளுக்கு அதிகமாக சரிவைச் சந்தித்தது. நேற்று காலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன் நன்மையளிக்கக் கூடிய அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்ந்தன.

நேற்று பட்ஜெட்டில் நீண்டகால முதலீடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டதையடுத்து 300 புள்ளிகள் சரிவைச் சந்தித்த சென்செக்ஸ் பின்னர் மீண்டது.

இந்நிலையில் இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடனேயே தொடங்கின. சென்செக்ஸ் நேற்று 35 ஆயிரத்து 906 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்த நிலையில். இன்று 199 புள்ளிகள் சரிவுடன் 35 ஆயிரத்து 707 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இந்நிலையில் தொடர்ந்து சரிந்த சென்செக்ஸ் குறைந்தபட்சமாக 35 ஆயிரத்து 295 புள்ளிகளைத் தொட்டது.

ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரை சரிந்தது. அதேபோன்று தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 11 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் குறைந்தது. 78 புள்ளிகள் சரிவுடன் 10 ஆயிரத்து 938 புள்ளிகளில் தொடங்கிய நிஃப்டி குறைந்தபட்சமாக 10 ஆயிரத்து 826 புள்ளிகளை தொட்டது.