​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாநகரப் பேருந்தில் சென்ற அரசு கல்லூரி மாணவர்களுக்குள் மோதல், தாக்குதலில் பெண் பயணிக்கு காயம்

Published : Feb 06, 2019 6:54 AM

மாநகரப் பேருந்தில் சென்ற அரசு கல்லூரி மாணவர்களுக்குள் மோதல், தாக்குதலில் பெண் பயணிக்கு காயம்

Feb 06, 2019 6:54 AM

சென்னையில், அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மோதி கொண்ட சம்பவத்தில், பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

அஸ்தினாபுரத்திலிருந்து, பிராட்வே நோக்கி 52-B என்ற மாநகரப் பேருந்து சென்றது. இதில், தியாகராயநகரைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்மணி, பாரிமுனைக்குச் செல்வதற்காக, நந்தனம் பேருந்து நிறுத்தத்தில் ஏறியுள்ளார்.

பேருந்து, அண்ணா சாலை, சிம்சன் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, நந்தனம் அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, பாட்டிலால் மாணவர்கள் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதில், சாந்திக்கு நெற்றியில் சிறுகாயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட 5 கல்லூரி மாணவர்களை பிடித்து, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தின்போது, SIET கல்லூரி மாணவி ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும், ஆனால், அவர் புகார் அளிக்கவில்லை என்றும் போலீசார் கூறியிருக்கின்றனர்..