​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறைகளில் கைதிகளின் உரிமைகள் மதிக்கப்படுகிறதா? பதிலளிக்க 10 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Published : Apr 02, 2018 2:06 PM

சிறைகளில் கைதிகளின் உரிமைகள் மதிக்கப்படுகிறதா? பதிலளிக்க 10 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Apr 02, 2018 2:06 PM

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் மனித உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பான புகார்களுக்கு பதிலளிக்குமாறு பத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள 1300 சிறைச்சாலைகளில் கைதிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.குறிப்பாக மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கைதிகளுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்ட்ரா, மேற்குவங்கம்,பஞ்சாப், டெல்லி, கோவா, மத்தியப் பிரதேசம்,அஸ்ஸாம், பீகார் ஆகிய பத்து மாநில அரசுகளுக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.