​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் பருப்பு கொள்முதல் மையங்கள்

Published : Feb 04, 2019 6:55 PM

வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் பருப்பு கொள்முதல் மையங்கள்

Feb 04, 2019 6:55 PM

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் உள்ள வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் பருப்பு கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் நெற்பயிருக்கு மாற்றாக உளுந்து, துவரை, பச்சை பருப்பு உள்ளிட்ட தானிய வகைகளை சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர். இவற்றிற்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகை, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் பருப்பு கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

இங்கு ஏப்ரல் மாதம் வரை விவசாயிகளிடம் இருந்து பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.