​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறை கைதிகளின் ஊதியப் பிடித்தம் தொடர்பான விதி ரத்து

Published : Feb 04, 2019 6:36 PM

சிறை கைதிகளின் ஊதியப் பிடித்தம் தொடர்பான விதி ரத்து

Feb 04, 2019 6:36 PM

சிறை கைதிகளின் ஊதியப் பிடித்தம் தொடர்பாக 1983ல் கொண்டுரப்பட்ட சிறை விதி, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.

மதுரை சின்ன சொக்கிக்குளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு ,"சிறை கைதிகளின் ஊதியத்தில் 50 சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்படுவது நியாயமானதாக இல்லை என்று தெரிவித்தனர்.

தமிழகத்தில் சிறை கைதிகளுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டனர். எனவே, 1983ல் கொண்டு வரப்பட்ட கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பணம் பிடித்தம் செய்ய வழிவகை செய்யும் தமிழ்நாடு சிறை விதி 481, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து ரத்து செய்து உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவுபடி கைதிகளின் ஊதியத்திலிருந்த உணவு, உடைக்காக நியாயமான முறையில் குறைந்த தொகையை பிடித்தம் செய்ய தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.