​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜகவில் துணிச்சலானவர் நிதின் கட்கரி மட்டுமே என ராகுல்காந்தி புகழ்ச்சி

Published : Feb 04, 2019 6:10 PM

பாஜகவில் துணிச்சலானவர் நிதின் கட்கரி மட்டுமே என ராகுல்காந்தி புகழ்ச்சி

Feb 04, 2019 6:10 PM

பாஜகவில் நிதின் கட்கரி மட்டுமே துணிச்சலானவர் எனக் குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, அவர் 3 விவகாரங்கள் பற்றிப் பேச வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். குடும்ப நலனைக் காக்க முடியாதவர் நாட்டை எப்படி ஆள முடியும் என பாஜக மாணவரணிக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

இது குறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பாஜகவில் துணிச்சலானவர் நிதின் கட்கரி மட்டுமே எனப் புகழ்ந்துள்ளார். அத்துடன் நில்லாமல் 3 விவகாரங்கள் குறித்தும் நிதின் கட்கரி பேச வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ரபேல் ஒப்பந்தம் மற்றும் அனில் அம்பானி, விவசாயிகளின் துயரம், அரசு நிறுவனங்களில் மத்திய அரசின் தலையீடு ஆகியவற்றை ராகுல்காந்தி பட்டியலிட்டுள்ளார்.