​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேசியப் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் பங்கு விலை 54 சதவீதம் வீழ்ச்சி

Published : Feb 04, 2019 3:59 PM



தேசியப் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் பங்கு விலை 54 சதவீதம் வீழ்ச்சி

Feb 04, 2019 3:59 PM

திவால் அடைந்ததாக அறிவிக்குமாறு தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் அணுகியதை அடுத்து அந்த நிறுவனத்தின் பங்குவிலை இன்று ஒரே நாளில் ஐம்பது விழுக்காட்டுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.

தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டியாலும் ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமை உள்ளதாலும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் இழப்பைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் திவால் அடைந்ததாக அறிவிக்குமாறு தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேசன் அணுகியுள்ளது.

இதனால் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் பங்குவிலை இன்று ஒரேநாளில் 54விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 30ரூபாய் 95காசுகளாக இருந்த பங்கு மதிப்பு அதையடுத்துப் படிப்படியாக வீழ்ச்சியடைந்துகொண்டே வந்தது. பங்குவிலை வீழ்ச்சியால் இன்று காலையில் முக்கால்மணி நேரத்துக்குள் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் 12கோடிப் பங்குகள் கைம்மாறியுள்ளது குறிப்பிடத் தக்கது.