​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பணத்திற்காக 10 மாத பெண் குழந்தையை விற்க முயன்ற தந்தை கைது

Published : Apr 02, 2018 12:42 PM

பணத்திற்காக 10 மாத பெண் குழந்தையை விற்க முயன்ற தந்தை கைது

Apr 02, 2018 12:42 PM

சென்னையில் பெற்ற குழந்தையை விற்க முயன்ற தந்தை மற்றும் தரகரை போலீஸார் கைது செய்தனர். வடபழனி நூறடிசாலையில் உள்ள தனியார் விடுதியில், ஆந்திர மாநில தம்பதி குழந்தையுடன் தங்கியிருப்பதாகவும், குழந்தையை விற்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் வடபழனி ஆர்-8 காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் போலீஸார் அங்கு சென்று விசாரித்த போது, ஆந்திராவைச் சேர்ந்த மனோஜ் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோர் தங்களின் 10 மாத பெண் குழந்தையுடன் தங்கியிருந்தனர்.

மனோஜுக்கு பணம் தேவைப்பட்டதால் மனைவியின் சம்மதமின்றி குழந்தையை மகேஷ் என்பவர் மூலம் விற்பனை செய்வதற்காக அழைத்துவந்தது தெரியவந்தது. இதனையடுத்து மனோஜ், மகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார். குழந்தை மற்றும் தாயை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.