​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனைகளில் தலையிடுவது பாகிஸ்தானின் நோக்கமல்ல - ஷா மெஹ்மூத் குரேசி

Published : Feb 03, 2019 6:16 PM

இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனைகளில் தலையிடுவது பாகிஸ்தானின் நோக்கமல்ல - ஷா மெஹ்மூத் குரேசி

Feb 03, 2019 6:16 PM

இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனைகளில் தலையிடுவது பாகிஸ்தானின் நோக்கமல்ல என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேசி கூறியுள்ளார்.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக்- உடன் ((Mirwaiz Umar Farooq)), ஷா மெஹ்மூத் குரேசி தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதை அறிந்த மத்திய அரசு, பாகிஸ்தான் நாட்டுத் தூதரை அழைத்துக் கண்டித்தது. இந்த நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ஷா மெஹ்மூத் குரேசி, பிரிவினைவாத தலைவருடன் பேசியதை ஒப்புக் கொண்டார்.

இருப்பினும் இதை பிரச்சனையாக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானை குறை சொல்லக் கூடாது என்றும், பேச்சுவார்த்தை மூலமாகவே காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.