சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியை மிதித்த விவசாயி உயிரிழப்பு
Published : Feb 03, 2019 5:51 PM
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே விளைநிலத்தைச் சுற்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்த விவசாயி உயிரிழந்தார். நாகரணை கிராமத்தைச் சேர்ந்த மும்மூர்த்தி என்பவர் தனது நாயுடன் நேற்றிரவு தோட்டத்தைப் பார்வையிடச் சென்றார்.
அப்போது விஜயகுமார் என்ற விவசாயி தனது நிலத்தைச் சுற்றி அமைத்திருந்த மின் வேலியில் மிதித்த போது மின்சாரம் தாக்கியதில் மும்மூர்த்தி உயிரிழந்தார். நாயும் உயிரிழந்தது.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற கடத்தூர் போலீசார், திருட்டுத் தனமாக மின்கம்பத்தில் கொக்கி போட்டு விஜயகுமார் என்பவர் தனது நிலத்திற்கு மின்வேலி அமைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அதைத் துண்டித்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ததுடன், தலைமறைவான விஜயகுமாரை தேடி வருகின்றனர்.