​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை மெரினாவில் குளித்த மூன்று மாணவர்கள் மாயம்

Published : Feb 01, 2019 7:57 PM

சென்னை மெரினாவில் குளித்த மூன்று மாணவர்கள் மாயம்

Feb 01, 2019 7:57 PM

சென்னை மெரினா கடல் பகுதியில் குளித்த மூன்று மாணவர்கள் காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சிலைக்கு பின்புறம் உள்ள கடல் பகுதிக்குச் சென்று குளித்த, மூன்று மாணவர்கள், காணாமல் போனதாக உடன் சென்ற மாணவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மூவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. மாயமான மாணவர்கள் தாம்பரம் நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சதீஷ், வினோத்குமார் மற்றும் செந்தில்குமார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.