​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லி போலீசார் சித்திரவதை செய்ததாக ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டு

Published : Jan 31, 2019 12:11 PM

டெல்லி போலீசார் சித்திரவதை செய்ததாக ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டு

Jan 31, 2019 12:11 PM

சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், டெல்லி போலீசாரின் சித்திரவதைக்கு அஞ்சியே செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்டதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ள ஸ்ரீசாந்த், தன் மீதான தடையை விலக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது , டெல்லி போலீசார் தனது குடும்பத்தை ஏதாவதுசெய்து விடுவதாக மிரட்டியதால் தான் செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்டதாக ஸ்ரீசாந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை தொடர்ந்து டெல்லி போலீசார் சார்பில் சூதாட்டத் தரகர்கள் இடையேயான உரையாடலும் சமர்பிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், சூதாட்டத்திற்கு அழைப்பு வந்த போது அதுதொடர்பாக ஏன் பிசிசிஐயிடம் முறையிடவில்லை என்றும், ஸ்ரீசாந்த் நடந்து கொண்ட விதம் சரியில்லை என்றும் கண்டித்தனர்.